சென்னை: தென்மாவட்டத்தில் இருந்து வரும் அரசுப் பேருந்துகளை தாம்பரம் வரை இயக்கினால் நடவடிக்கை என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக துறை சார்பில் அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை விவரம்: சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் பேருந்துகள், கிளாம்பாக்கம், தாம்பரம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையம் வரை இயக்கப்படுகின்றன.