ஹைதராபாத்: நாகர்னூர் ஸ்ரீசைலம் இடதுகரை சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையில் அதன் இடிபாடுகளில் சிக்கிய 8 பேரை மீட்கும் நடவடிக்கையில் உதவ இந்திய ராணுவத்தின் பைசன் பிரிவு பொறியாளர் பணிக்குழு இணைந்துள்ளது.
இது குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுரங்கப்பாதை இடிபாடுகளை அகற்றவும் உள்ளே சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக வெளியேற்றவும், உயர் திறன்கொண்ட பம்பிங்க் செட்கள், தோண்டும் இயந்திரங்கள், புல்டோசர்களுடன் மீட்பு பணிகளில் ராணுவ பொறியாளர்களும், ராணுவ மருத்துவக்குழுக்களும் ஈடுபட்டுள்ளனர்.