கடலூர் : “பள்ளிக்கல்வியில் நாட்டிலேயே 2வது இடத்திற்கு உயர்த்தியிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் திருப்பயரில் தனியார் பள்ளியில் பெற்றோர்களை கொண்டாடுவோம் விழாவில் பேசிய அவர், ” தமிழ்நாடு அரசு செய்வது எல்லாமே சாதனைதான். அன்பில் மகேஸ் பொறுப்பு வகிக்கும் காலம், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலம். பிள்ளைகள் மீது பெற்றோருக்கு இருக்கும் அக்கறை, அரசுக்கும் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை செயல்படுகிறது. கல்வித்துறைக்கு எவ்வளவு முக்கியத்துவம் வழங்குகிறது என்பதை அனைவரும் உணர வேண்டும். தேசிய கல்விக் கொள்கை என்பது தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் வேட்டு வைக்கும் கொள்கை,”இவ்வாறு தெரிவித்தார்.
The post தேசிய கல்விக் கொள்கை என்பது தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் வேட்டு வைக்கும் கொள்கை :முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.