தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் பிடிபட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சிறையில் இருந்து தப்பிச் சென்ற கைதிகளை, டிரோன் கண்காணிப்பை பயன்படுத்தி விரைவாக கண்டறிந்து காவல்துறையினர் பிடித்ததாக தமிழ்நாடு காவல்துறையின் தெற்கு மண்டல ஐஜி விஜயேந்திர பிடாரி தெரிவித்துள்ளார். இவர்களையும் சேர்த்து, தேனி சிறையிலிருந்து நேற்று இரவு தப்பிய 17 கைதிகளில், இதுவரை 13 பேர் பிடிக்கப்பட்டுள்ளனர்.

