குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது நான்சச். இந்த பகுதியை சேர்ந்த வரதராஜன் என்பவரது வீட்டருகே மின் கம்பம் உள்ளது. இதில் தேன் கூடு கட்டியுள்ளது. தேனை ருசிக்க ஒரு கரடி மின்கம்பத்தில் நேற்று ஏறியது. அப்போது, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட கரடி தேயிலைத்தோட்டத்தில் விழுந்து உயிரிழந்தது.
தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். இதில் மின்சாரம் பாய்ந்து பலியானது 5 வயது ஆண் கரடி என்பது தெரியவந்தது. முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ், கரடியின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். அதன்பின், கரடி அங்கேயே எரியூட்டப்பட்டது.
The post தேனை ருசிக்க கம்பத்தில் ஏறிய கரடி மின்சாரம் பாய்ந்து பலி appeared first on Dinakaran.