வால்பாறை: வால்பாறை பகுதியில் நிலவி வரும் சாரல் மழையால் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வால்பாறை பகுதியில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தேயிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் மழை மே முதல் வாரத்தில் இருந்தே வெயிலுடன் கூடிய மழையாக பெய்து வருகிறது. எனவே பசுந்தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வேலையாட்கள் கிடைக்காமல் தோட்ட நிர்வாகங்கள் தவித்து வருகின்றனர். தோட்ட பணிகள் செய்ய பணியாட்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
மகசூல் அதிகரிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பலர் 2 ஷிப்ட் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பன்னிமேடு,கவர்கல், வாகமலை உள்ளிட்ட பகுதிகளில் பனிமூட்டம் தேயிலை செடிகளை மூடி, எதிரே நிற்பவர்கள் கூட தெரியாத அளவிற்கு உள்ளது.
The post தேயிலை மகசூல் அதிகரிப்பு appeared first on Dinakaran.