புதுடெல்லி: 2025-26 நிதியாண்டுக்கான ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில், பிஹாருக்கு அதிகப்படியான நலத்திட்டங்களும், அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பி, எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர்.
பிஹாரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய பட்ஜெட்டில் அம்மாநிலத்துக்கு மட்டுமே ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. அதே வேளையில், மத்திய பாஜக கூட்டணி ஆட்சியில், பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் பங்கு அளப்பரியது. அவரை திருப்திப்படுத்தவும், ஆட்சியை காப்பாற்றி கொள்ளவும், பிஹாருக்கு பாஜக அரசு முக்கியத்துவம் அளிப்பதாக கூறப்படுகிறது.