தைபே: தைவானின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானதாக தகவல் தெரிவித்துள்ளனர். யூஜிங் பகுதிக்கு வடக்கே 12 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்தது. நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. திடீரென நிகழ்ந்த நிலநடுக்கத்தை அறியாத மக்கள் பீதியில் வீடுகளில் இருந்து அலறி அடித்துக் கொண்டு ஓடினர். யுஜிங் மாவட்டத்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி, அங்கு அலமாரிகள் இடிந்து தரை முழுவதும் பானங்கள் சிதறிக் கிடந்தன.
நிலநடுக்கத்தால் 27 பேர் காயம் அடைந்ததாகவும், உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நான்ஸ்சி மாவட்டத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. அதனுள் சிக்கி இருந்த குழந்தை உள்ளிட்ட 6 பேர் மீட்புக்குழுவினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஜூவேய் பாலம் சேதம் அடைந்து உள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பதாக பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். தைவானில் கடந்த ஏப்ரல் மாதம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக நிலநடுக்கம் பதிவானது. இதில் சிக்கி ஹூகாலியன் பகுதியில் 13 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு: பீதியில் மக்கள் சாலையில் தஞ்சம்!! appeared first on Dinakaran.