இந்தியாவில் மக்கள் தொகைக்கேற்ப நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளை குறைப்பதோ, கூட்டுவதோ புதிதல்ல. கடந்த காலத்தில் 1952-ம் ஆண்டிலும் அதற்குப் பிறகு 1963-ம் ஆண்டிலும் மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்பட்டது. 1951-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்குக்கு ஏற்ப, நாடாளுமன்றத்துக்கு 494 எம்.பி தொகுதிகள் வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டது.
1956-ல் நிர்வாக வசதிக்காக புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இதையடுத்து, இந்த எண்ணிக்கை 522 ஆக உயர்ந்தது. பின்னர் 1973-ல் அது 543 ஆனது. அதற்குப் பிறகு கடந்த 50 ஆண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதற்குக் காரணம் தென் மாநிலங்களின் எதிர்ப்பு.