திருவனந்தபுரம்: நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடைபெற உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு திமுக சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.
திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து அமைச்சர் பி.டி. தியாகராஜன், திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர், முதல்வர் மு.க. ஸ்டாலினின் அழைப்புக் கடிதத்தை வழங்கினர். மேலும், கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.