சென்னை: மக்களவை தொகுதி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என திமுக எம்.பி. செல்வகணபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக எம்.பி. செல்வகணபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;
தொகுதி மறுவரையறை- தமிழ்நாட்டுக்கு பெரிய பாதிப்பு: எம்.பி. செல்வகணபதி
மக்களவை தொகுதி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவின் பிரதிநிதித்துவம் குறையும். பாஜகவின் வீழ்ச்சிக்கு தமிழ்நாடு மட்டுமே காரணமாக உள்ளது.
தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும்: திமுக
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் கூடுதல் தொகுதிகளைப் பெறும். தொகுதி மறுவரையறை செய்தால் 4 மாநிலங்களுக்கு மட்டும் தொகுதி எண்ணிக்கை 274ஆக அதிகரிக்கும். தொகுதி மறுசீரமைப்பால் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்கள் மட்டுமே பயன்பெறும்.
10 மாநிலங்களை வைத்து ஆட்சியில் இருக்க பாஜக திட்டம்: எம்.பி. செல்வகணபதி
4 மாநிலங்களில் தொகுதிகளை அதிகரிப்பதன் மூலம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என பாஜக திட்டமிட்டுள்ளது. வெறும் 10 மாநிலங்களை வைத்து ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருக்கலாம் என பாஜக திட்டம் போடுகிறது. தென்மாநிலங்களில் பாஜக தோல்வி அடைந்தாலும், வடமாநிலங்களை வைத்து ஆட்சி அமைக்க முடியும். ஒன்றிய பாஜக அரசு எதையும் வெளிப்படையாக மேற்கொள்ளாது என்று திமுக எம்.பி. செல்வகணபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
The post தொகுதி மறுவரையறை.. தமிழ்நாட்டுக்கு பெரிய பாதிப்பு; தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும்: திமுக எம்.பி. செல்வகணபதி கண்டனம்! appeared first on Dinakaran.