அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள படம், ‘டிராகன்’. அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ். ரவிகுமார், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். வரும் 21-ம் தேதி வெளியாகிறது.
இதன் செய்தியாளர்கள் சந்திப்பில், பிரதீப் ரங்கநாதன் கூறும்போது, ‘லவ் டுடே’ படத்துக்குப் பிறகு என்ன மாதிரியான கதையைத் தேர்வு செய்வது என்பதில் குழப்பம் இருந்தது. அப்போதுதான் ‘டிராகன்' வாய்ப்பு கிடைத்தது. ஏஜிஎஸ் நிறுவனத்துடன் 2-வது முறையாக இணைந்துள்ளேன்.