சென்னை: பட்டறை தொழிலாளி உயிரிழப்புக்கு காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழக காவல்துறையின் அலட்சியப்போக்கு காரணமாக, சென்னை ஆர்.கே.நகர் காவல்நிலையம் முன்பு ராஜன் என்கிற பட்டறை தொழிலாளி தீக்குளித்து உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
ராஜன் உயிரிழப்பு குறித்து அவரது உறவினர்கள் கூறுவது வேறு விதமாக உள்ளது. அதாவது, கடந்த மாத இறுதியில், ராஜன் மது அருந்திவிட்டு தெருவில் நின்று கொண்டிருந்தார். இதை வீடியோ எடுத்த காவலர் ஒருவர் அவரிடம் ரூ.3 ஆயிரம் கேட்டுள்ளார். பணம் இல்லை என்று கூறியதால், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.