செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த வயலக்காவூர் கிராமத்தை சேர்ந்தவர் துலுக்கானம் (48). இவர் செங்கல்பட்டில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது துலுக்கானத்திற்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே அக்கம் பக்கத்தினர் உடனே துலுக்கானத்தை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், துலுக்கானம் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து, துலுக்கானத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து துலுக்கானம் மகன் வசந்த் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளி மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சக தொழிலாளர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post தொழிலாளி பலி appeared first on Dinakaran.