ெசன்னை: தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: நமது நாட்டிலுள்ள 80 சதவீத மக்கள் நகை அடமான கடன் மூலம் அவசர பண தேவையை நிறைவேற்றி வருகின்றனர். தங்க நகை கடனை முழுமையாக அடைத்த பின்புதான் மறு அடகு வைக்கப்படும் என அறிவித்துள்ளது ஏழை மக்களை அடகு கடைகளை நோக்கி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ள கூடியதாக உள்ளது.
தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளை கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி. ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் அவசர தேவைக்கு நகைக்கடன் போன்றவற்றை சார்ந்திருக்கும் சூழலில் ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறை பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ரிசர்வ் வங்கி யின் அறிவிப்பை திரும்பபெற வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
The post நகை அடகு புதிய அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்: தேசிய நாடார் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.