விஜய் நடித்த ‘மாஸ்டர்’, ‘லியோ’, விஜய் சேதுபதி நடித்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படங்களை, செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ சார்பில் தயாரித்தவர் எஸ்.எஸ்.லலித்குமார். இப்போது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தைத் தயாரித்து வரும் அவர், அடுத்து தயாரிக்கும் படத்தில் அவரது மகன் எல்.கே.அக்‌ஷய்குமார் அறிமுகமாகிறார். இதில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார்.
வெற்றிமாறனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ், இயக்குநராக அறிமுகமாகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார்.