நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கம் அளித்துள்ளார்.
சில நாட்களாக ஸ்ரீயின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளியான வண்ணம் இருந்தன. ஸ்ரீயின் இந்த நிலைக்கு காரணம் அவருக்கு திரையுலகில் முறையான சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறினார்கள். இதனை முன்வைத்து பலரும் ‘இறுகப்பற்று’ தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபுவை கடுமையாக சாடினார்கள்.