சென்னை: தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் பதியப்பட்ட பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் சீமானை மீண்டும் விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி சென்னையில் உள்ள வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011-ல் புகார் அளி்த்திருந்தார். அதன்பேரில் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப்பதிந்தனர்.