நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர், ஜெய்ப்பூரில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனது மனைவியும் நடிகையுமான ஸ்ரீதேவி நடித்து கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மாம்’ படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. அதில் என் மகள் குஷி கபூர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் சில முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள். முடிவானதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.