சென்னை: நந்தலாலா மறைந்தார் எனும் கொடுஞ்செய்தியை ஏற்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறேன் என சு.வெங்கடேசன் எம்.பி., இரங்கல் தெரிவித்துள்ளார். கவிஞரும் பட்டிமன்றப் பேச்சாளருமான நந்தலாலா (வயது 69) உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.பெங்களூரு மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நந்தலாலா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவராக இருந்தார். அவரது மறைவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், கவிஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,
கொடுஞ்செய்தியை ஏற்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறேன்: சு.வெங்கடேசன்
நந்தலாலா மறைந்தார் எனும் கொடுஞ்செய்தியை ஏற்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறேன் என சு.வெங்கடேசன் எம்.பி., இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், தமுஎகச மேடையின் தனித்த அடையாளமாக, சமத்துவ கோட்பாட்டின் தன்னிகரற்ற முழக்கமாக இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்த குரல் ஓய்ந்தது. பூவிரியும் காவிரியின் புன்சிரிப்பை, அடர்த்தியும் அழகும் கொண்ட தீந்தமிழின் புதுமொழியை தமிழகத்திற்கு அளித்துச்சென்றுள்ள தோழர் நந்தலாலாவுக்கு வீரவணக்கம். என தெரிவித்தார்.
The post நந்தலாலா மறைந்தார் எனும் கொடுஞ்செய்தியை ஏற்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறேன்: சு.வெங்கடேசன் எம்.பி., இரங்கல் appeared first on Dinakaran.