சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி – ஒடிசா எஃப்சி அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகள் தரப்பிலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.
2-வது பாதி ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணி கோல் அடித்து அசத்தியது. 48-வது நிமிடத்தில் ஒடிசா அணியின் கோல்கீப்பர் அம்ரிந்தர் சிங் தனது பகுதியில் இருந்து புய்தியாவுக்கு பந்தை தட்டிவிட்டார். ஆனால், அவர் அதை கலெக்ட் செய்யவில்லை. அப்போது விரைந்து செயல்பட்ட சென் னையின் எஃப்சி அணியின் கானர் ஷீல்ட்ஸ் பந்தை அற்புதமாக கடத்திச் சென்று பாக்ஸ் பகுதிக்குள் கட் செய்தார். அதை 6 அடி தூரத்தில் பெற்ற வில்மர் ஜோர்டான் கோல் வலையின் மையப்பகுதியில் திணித்தார். இதனால் சென்னையின் எஃப்சி 1-0 என முன்னிலை வகித்தது.