நாகை: நாகை மாவட்டத்தில் அதிகாலை முதலே சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகாலை 5 மணி முதலே தொடர்ச்சியாக கனமழையும், மிதமான மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக நாகப்பட்டினம், நாகூர், கீழ்வேலூர், சிக்கல், மஞ்சகொள்ளை, பொரவச்சேரி, நடுக்கடை, திட்டச்சேரி, திப்புகழூர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
மேலும் மழை காரணமாக அதிகாலை முதலே முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படியே சாலையில் வாகனங்கள் செல்கின்றன. இந்த சூழலில் தொடர்ச்சியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது பெய்து வரும் மழை குளிச்சியையும், பொதுமக்களுக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
The post நாகை மாவட்டத்தில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அதிகாலை முதலே சூறைக்காற்றுடன் மழை appeared first on Dinakaran.