சென்னை: நாட்டிலேயே முதல் முறையாக 150சிசி ஹைப்பர் ஸ்போர்ட் ஸ்கூட்டரை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனப் பிரிவில் உலக அளவில் முன்னணியில் உள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், தனது என்டார்க் பிராண்டின் கீழ் மிக வேகமான ஹைப்பர் ஸ்போர்ட் ஸ்கூட்டரை சென்னையில் நேற்று அறிமுகம் செய்தது. 150 சிசி இன்ஜின் திறன் கொண்ட நாட்டின் முதல் ஸ்கூட்டர் என்ற பெருமை இதற்கு கிடைத்துள்ளது.
புதிய தலைமுறையைச் சேர்ந்த இருசக்கர வாகன பிரியர்களை திருப்திபடுத்தும் வகையில், அபாரமான செயல்திறன், கம்பீரமான ஸ்போர்ட்டி தோற்றம் மற்றும் அதநவீன தொழில்நுட்பத்துடன் இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. 6.3 வினாடிகளில் 0-விலிருந்து 60 கி.மீ. வேகத்தை எட்டும் திறன் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 104 கி.மீ. வேகத்தில் செல்லும்.