பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும், உடல் வலுவுக்கும் உதவுகிறது.
* இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வர இதய படபடப்பு நீங்கும்.
* கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது.
* சிறுநீரக கல்லடைப்பு நீங்க உதவுகிறது.
* எலும்புகள், பற்கள் பலப்படவும் பயன்படுகிறது.
* இரைப்பை, குடல், பிற ஜீரண உறுப்புகளை பலமாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
* நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடலுக்கு நன்மை தருகிறது.
* தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவும்.
* ‘நாட்டு ஆப்பிள்’ என்றழைக்கப்படும் இதில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, ஏ, பி, பி2 என விட்டமின்கள் உள்ளன.