நான் இரண்டு முறை ‘கண்ணப்பா’ வாய்ப்பை நிராகரித்தேன் என்று நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கண்ணப்பா’. இதன் டீஸர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இப்படத்தின் சிவபெருமான் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அக்‌ஷய் குமார் பேசும்போது, “முதலில், எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. நான் இரண்டு முறை இந்த வாய்ப்பை நிராகரித்தேன். ஆனால், இந்திய சினிமாவில் பெரிய திரையில் சிவனை உயிர்ப்பிக்க நான் சரியான நபர் என்ற விஷ்ணுவின் உறுதியான நம்பிக்கை என்னை உண்மையிலேயே சமாதானப்படுத்தியது.