‘சிங்கத்தின் குகையில் சென்று அதன் பிடரியை உலுக்கியது போல…’ என்பது வீரத்துக்கு உதாரணமாகக் கூறப்படும் சொலவடை. அப்படி, வாட்டாள் நாகராஜின் சொந்த மாநிலத்தில் அவரது சொந்த மாவட்டமான மைசூருக்கே சென்று பிடரியை பிடித்து உலுக்கினார் ஜெயலலிதா! ஜெயலலிதாவின் முன்னோர்கள் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள்.
ஜெயலலிதாவின் தாய்வழி தாத்தா ரங்கசாமி ஐயங்கார், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக ஸ்ரீரங்கத்தில் இருந்து மைசூருக்குச் சென்றவர். ஜெயலலிதா பிறந்தது கர்நாடகா என்றாலும் அவரது பூர்வீகம் ஸ்ரீரங்கம்தான். அதனால், ஜெயலலிதா எப்போதும் எங்கேயும் தன்னை தமிழச்சி என்றே பெருமையாகச் சொல்லிக் கொள்வார்.