நாகர்கோவில்: நாளை திருக்கார்த்திகையை முன்னிட்டு குமரி ஆலயங்களில் சொக்கப்பனைகளை பக்தர்கள் தயார் செய்து வருகின்றனர். திருக்கார்த்திகையை முன்னிட்டு நாகர்கோவில் நாகராஜா கோயில், பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோயில் உள்பட முக்கிய கோயில்கள், சமுதாய கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தி பூஜை செய்யப்படுவது வழக்கம். சில கோயில்களில் சொக்கப்பனைக்காக தேர்வு செய்யப்பட்ட பனை மரத்தை ஊர்வலமாக கொண்டு வந்து பூஜித்து, அதனை நடுகின்றனர். பின்னர் பனை ஓலைகளை அந்த மரத்தை சுற்றி கட்டி அதனை தீவைத்து வழிபாடு செய்வது வழக்கம்.
சிறிய கோயில்களில் வாழைத்தண்டி்ல், சிறிய மண் சட்டியை வைத்து அதில் தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர். நாளை திருக்கார்த்திகை என்பதால், நாகராஜா கோயில் உள்பட பல கோயில்களில் சொக்கப்பனை கொளுத்துவதற்காக நேற்று மாலை பனை மரத்தடிகளை ஊன்றி, பனை ஓலைகளை சுற்றி கட்டி வைத்துள்ளனர். அதேபோல் வீடுகளிலும் பழைய சிறிய மண் சட்டி விளக்குகளை எண்ணெய் குடிக்காமல் இருக்க தண்ணீரில் ஊற வைத்து தயார் படுத்தி வருகின்றனர். இதுதவிர பல வண்ணங்களில் பீங்கான் விளக்குகள், மெழுழுவர்த்திகைள விற்பனையும் சூடு பிடித்துள்ளது. கொழுக்கட்டை அவிப்பதற்காக திரணி இலைகள் விற்பனையும் சூடு பிடித்துள்ளது.
The post நாளை திருக்கார்த்திகை; சொக்கப்பனைகளை தயார்படுத்தும் பக்தர்கள் appeared first on Dinakaran.