டெல் அவிவ்: மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் இஸ்ரேல் விதித்த நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்க மறுத்தது. இதையடுத்து காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நேற்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இஸ்ரேலின் நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்காவிட்டால் குறிப்பாக அனைத்து பணயக் கைதிகளையும் விடுவித்து, ஆயுதக்குறைப்புக்கு முன்வராவிட்டால் ஹமாஸின் தலைநகரமான காசா அழிக்கப்படும்’’ என்று எச்சரித்துள்ளார்.