
கொல்கத்தா: தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் கேசவ் மஹாராஜ், சைமன் ஹார்மர், செனுரன் முத்துசாமி, பிரேனலன் சுப்ராயன் ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த சுழல் கூட்டணி சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 35 விக்கெட்களை வேட்டையாடி இருந்தது.

