புதுடெல்லி: நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்கள் அந்த நிலத்துக்கு சட்டரீதியாக உரிமை கோர முடியாது என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
பர்மாவில் இருந்து தாயகம் திரும்பிய அகதிகளுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்காக பர்மா இந்தியர்கள் வீட்டு வசதி கட்டுமான கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட்டு, பாலவாக்கம் திருவள்ளுவர் நகரில் 24 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.