சென்னை : பத்திரப்பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறை வழங்கிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது. காரைக்குடியில் பல கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக விற்பனை செய்த விவகாரத்தில், பத்திரப்பதிவு பதிவாளர், காவல் துணை ஆய்வாளர், வழக்கறிஞர் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைகேடாக பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை தாங்களே ரத்து செய்து கொடுப்பதாக கீழமை நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளனர். உத்தரவாதத்தை அடுத்து 11 பேருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.
The post நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாதது ஏன்? : நீதிபதி appeared first on Dinakaran.