அஜர்பைஜான்: அஜர்பைஜான் நாட்டில் நடைப்பெற்று வரும் பருவநிலை நடவடிக்கை உச்சி மாநாடு (சிஓபி29) என்ற சர்வதேச மாநாட்டில் சத்குரு கலந்து கொண்டுள்ளார். இதில் பேசிய சத்குரு, “நம் அனைவருக்கும் அடித்தளமாக இருக்கும் நுண்ணுயிர்கள் எல்லாம் அழிந்து வருகின்றன. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல இந்த பூமியில் இருக்கும் அனைத்து உயிர்களுக்குமான மரண எச்சரிக்கை,” என்று கூறியுள்ளார்.
அஜர்பைஜானில் பாகு நகரத்தில் நவ.11ம் தேதி முதல் 15ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டுள்ள சத்குரு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மண் வளம் மேம்பாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசியது: “நாம் சூழலியல், காலநிலை ஆகியவற்றை பற்றி பேசும்போது இது மனித உயிர், வாழ்வாதாரம் மற்றும் மனிதர்களின் வாழ்க்கை முறை பற்றியது மட்டுமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புவுடையவை. இந்த பூமியின் ஆரோக்கியம் என்பது மனிதர்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களும் உயிர்போடு இருப்பதில் இருக்கிறது. நுண்ணுயிர், பூச்சி புழு மற்றும் மற்ற அனைத்து சிறிய உயிர்களும் வலிமையாக வாழவில்லை என்றால் நாம் வலிமையாக வாழ முடியாது.