சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை முதல் புதுச்சேரி வரையிலான கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை புயல் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மறுநாள் வரை மழை நீடிக்கும். வங்கக்கடலில் உருவாகும் புயல் நாளை புதுச்சேரி அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 21 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
சென்னை, திருவள்ளூர், காஞ்சி, அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 12 முதல் 20செ.மீ. மழை பெய்யும்.
8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.
நாளை 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு நாளை மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
8மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கு வாய்ப்பு
திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், தஞ்சாவூரில் நாளை கனமழை பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்
நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிச.2,3-ல் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
டிச.2,3-ம் தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
The post நெருங்கும் ஃபெங்கல் புயல்.. இன்று 5 மாவட்டங்களுக்கும், நாளை 7 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட்: வானிலை மையம் எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.