புதுடெல்லி: இந்தியா பாகிஸ்தானிடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை அழைத்துப் பேசிய அமெரிக்க வெளியுறுவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, பதற்றத்தை தணித்து நேரடி பேச்சுவார்த்தைகளுக்கான வழிகளை ஆராயுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறுத்துறை செய்தித் தொடர்பாளர் டாம்மி புரூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தவறான புரிதல்களைத் தவிர்த்து இரண்டு தரப்பினரும் பதற்றத்தைத் தணித்து, நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். எதிர்கால சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காக பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.