வாஷிங்டன்: அமெரிக்காவின் எஃப்பிஐ (FBI) புலனாய்வு அமைப்பின் 9-வது இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் பதவியேற்றுக் கொண்டார். இப்பதவியை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அலங்கரிப்பது இதுவே முதன்முறை. காஷ் படேல் குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
காஷ் படேல் பதவியேற்பு விழாவில் அவருடன் அவரது காதலி மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். காஷ் படேலுக்கு அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அப்போது, காஷ் படேல், இந்து மதத்தின் புனித நூலான பகவத் கீதையின் மீது கைகளைவைத்து பதவிப் பிரமாண உறுதிமொழியேற்றார்.