சென்னை: திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்றும் இதை ஆளுநர் உரையில் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை கூட்டம் தொடங்குகிறது. இதில் 2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணிநிரந்தரம் வாக்குறுதியை, முதல்வர் ஸ்டாலின் இந்த முறையாவது நிறைவேற்றுவார் என 12 ஆயிரம் குடும்பங்கள் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.