பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி சமீபத்தில் கேதன் பரேக் உட்பட மூன்று பேர் பங்குச் சந்தை பரிவர்த்தனைகளில் பங்கேற்க தடை விதித்தது. இவர்கள் மூவர் மீதும் ‘ஃப்ரண்ட் ரன்னிங்’ (front running) மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மோசடி எப்படி நடந்தது? பங்குச்சந்தையில் சில நிமிடங்களில் பல கோடிகளை குவித்த கேதன் பரேக் சிக்கியது எப்படி?