அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள கோயிலுக்கு வெளியே நிகழ்த்தப்பட்ட வெடிபொருள் வீச்சு சம்பவத்தில், கோயிலின் சுவர்கள் தேசமடைந்தது, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், சம்பந்தப்பட்ட கண்ட்வாலா பகுதி குடியிருப்பு வாசிகளிடையே இச்சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளில், அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் தாகுர்த்வாரா கோயிலுக்கு மோட்டார் சைக்கிளில் வருவது தெரிகிறது. சிறிதுநேர காத்திருப்புக்கு பின்பு அவர்களில் ஒருவர் சில வெடிபொருள்களை கோயிலை நோக்கி வீசுகிறார். இருவரும் தப்பிச் சென்ற சில நொடிகளில் வெடிபொருள் வெடிப்பது தெரிகிறது. இச்சம்பவம் குறித்து அமர்தசரஸ் காவல் ஆணையர் குர்ப்ரீத் சிங் புல்லர் கூறுகையில், "இந்தச் சம்பவம் குறித்து அதிகாலை 2 மணிக்கு கோயில் பூசாரி, போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து நானும் மற்ற உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்குச் சென்றோம்.