வால்பாறை: வால்பாறை படகு இல்லம் அருகே நேற்று காலை ஒற்றை யானை சாலையை கடந்ததால் பரபரப்பு நிலவியது. வால்பாறை வனப்பகுதியில் தண்ணீர் வரட்சி காரணமாக, வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் உள்ள சதுப்பு நிலம், ஆறுகள் மற்றும் நீர் நிலைகளுக்கு படையெடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை, நகராட்சி படகு இல்லம் அருகே வாழைத்தோட்டம் ஆற்றை கடந்து, ஸ்டேன்மோர் சாலையில் ஏறி, தேயிலைத்தோட்டம் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. இந்நிலையில் யானையின் எதிர்பாராத சாலையை கடக்கும் நிகழ்வை வாகன ஒட்டிகள் படம் பிடித்து, யானையை கண்டு ரசித்தனர்.
பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்தி யானை சாலையை கடக்க உதவினர். எனவே யானை எளிதாக சாலையை கடந்து சென்றது. அப்பகுதியில் இருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் கண்டு ரசித்தனர்.இதே பகுதியில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் அரிசி குடோன் உள்ளது. வால்பாறை பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் இங்கிருந்து வழங்கப்படுகிறது. எனவே வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
The post படகு இல்லம் அருகே சாலை கடந்த யானை appeared first on Dinakaran.