சென்னை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் வெளியிட்ட அறிவிப்பு:
ஆவின் நிறுவனம் எதிர்வரும் பண்டிகைகளை முன்னிட்டுமக்கள் விரும்பும் வகையில் மேங்கோ மற்றும் கிரேப் டூயட் வகைகள் 2 வாங்கினால் ₹10 தள்ளுபடி விலையில் இன்று முதல் முதல் ஜனவரி 31ம் தேதி வரை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.மேலும் ஐஸ் கிரீம் வகைகளை விற்பனை செய்ய தமிழ்நாடு முழுவதும் மொத்த விற்பனையாளர்களை நியமனம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே ஐஸ்கிரீம் விற்பனையில் ஆர்வமுள்ளவர்கள் தொழில் முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான www.aavinmilk.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக அணுகவேண்டிய தொலைபேசி எண்: 9043099905.
The post பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடியில் ஐஸ்கிரீம் விற்பனை: ஆவின் அறிவிப்பு appeared first on Dinakaran.