சென்னை: பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகை இம்மாத இறுதிக்குள் வரவு வைக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். “புயலால் பாதிக்கப்பட்ட 5.18 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.498 கோடி நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கணக்கெடுப்பு பணி முடிந்து அதற்கான தொகை இம்மாத இறுதிக்குள் வரவு வைக்கப்படும். சமூக வலைதளங்களில் அரசியல் செய்பவர்கள் கூறுவதை நம்ப வேண்டாம்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
The post பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகை இம்மாத இறுதிக்குள் வரவு வைக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.