மும்பை: ஆட்டோமொபல் துறைக்கு நிம்மதி அளிக்கும் விதமாக அத்துறை மீது விதிக்கப்பட்ட வரியை நிறுத்தி வைக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரிசீலனை செய்து வருவதாக வெளியான தகவலையடுத்து ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏறுமுகத்துடன் தொடங்கியது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் உணரப்பட்டது.
முன்னணி 30 நிறுவனங்களை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீட்டு எண் 2.10 சதவீதம் அதிகரித்து (1,577 புள்ளிகள்) 76,734 புள்ளிகளிலும், நிப்டி 2.19 சதவீதம் (500 புள்ளிகள்) உயர்ந்து 23,328 புள்ளிகளிலும் நிலைபெற்றன.