சென்னை: மாமல்லபுரம் அருகே நடந்த நிகழ்ச்சியில் 3வது கட்டமாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழகத் தலைவர் நடிகர் விஜய் பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார்.
தவெக தலைவர் நடிகர் விஜய் காலை 9.15 மணிக்கு வந்தார். தொடர்ந்து, 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியில், த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார் விஜய் appeared first on Dinakaran.