சேலம்: சேலம்மாவட்டம் வாழப்பாடி அருகே பழனியாபுரத்தில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 17 குழந்தைகள் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி பகுதியில் கோகுலம் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவ-மாணவிகளின் வசதிக்காக, நிர்வாத்தின் சார்பில் பேருந்து போக்குவரத்து ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல மல்லிகரை, கணக்கம்பட்டி பகுதியில் இருக்கும் மாணவர்களை ஏற்றுக்கொண்ட பேருந்து பள்ளி நோக்கி பயணம் செய்தது.
வேன் அங்குள்ள கரளம்பட்டி கிராமம் அருகே சென்றபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, ஒரு வீட்டின் சுவரின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதையடுத்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து வேனில் சிக்கிய குழந்தைகளை மீட்டனர். இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த 17 குழந்தைகள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். பள்ளி வாகனம் விபத்திற்குள்ளான செய்தி அறிந்த பெற்றோர், பதறியபடி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வேன் கவிழ்ந்து 17 குழந்தைகள் காயம்! appeared first on Dinakaran.