சென்னை: சான் அகாடமியின் 7-வது சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
இதன் 2-வது நாளான நேற்று சிறுவர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டங்களில் பெரம்பூர் டான் போஸ்கோ 25-20, 25-18 என்ற செட் கணக்கில் பிஏகே பழனிசாமி மேல்நிலைப் பள்ளி அணியையும், ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் 33-35, 25-10, 25-10 என்ற செட் கணக்கில் ஒய்எம்சிஏ கொட்டிவாக்கம் அணியையும் வீழ்த்தின.