இங்கிலாந்து: பழமையான மரத்தை வெட்டிய இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4 ஆண்டுகள், 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 2023 செப்டம்பர் 28ஆம் தேதி இரவு டேனியல் கிரஹாம், ஆடம் கார்ருதர்ஸ் எனும் இருவர் ரம்பத்தை பயன்படுத்தி மரத்தை வெட்டியிருக்கின்றனர். 1991 ஆம் ஆண்டு வெளியான ‘ராபின் ஹூட்: பிரின்ஸ் ஆஃப் தீவ்ஸ்’ எனும் படத்தின் காட்சியிலும் இம்மரம் இடம்பெற்றிருக்கிறது.
The post பழமையான மரத்தை வெட்டிய இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை..!! appeared first on Dinakaran.