சென்னை: வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.680 குறைந்து சற்றே ஆறுதல் அளித்த நிலையில் இரண்டாம் நாளான இன்று பவுனுக்கு ரூ.840 உயர்ந்து மீண்டும் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஆண்டு, தீபாவளியின்போது அதிகபட்சமாக ஒரு பவுன் ரூ.59,000-ஐ கடந்து விற்பனையானது. பின்னர், விலை குறைந்து, மீண்டும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு பவுன் தங்கம் விலை கடந்த ஜனவரி 22-ம் தேதி ரூ.60,200, கடந்த 24-ம் தேதி ரூ.60,440, கடந்த 29-ம் தேதி ரூ.60,760, கடந்த 30-ம் தேதி ரூ.60,880 என தொடர்ந்து அதிகரித்து, புதிய உச்சங்களை தொட்டது.