குன்னம்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே எழுமூர் கிராமத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் அமைச்சர்கள் சி.வி.கணேசன், சிவசங்கர் ஆகியோர் பங்கேற்றனர். முகாமை முடித்துவிட்டு வெளியே வந்தபோது பள்ளி சீருடையுடன் வந்த ஏரிக்கரையை சேர்ந்த 13 வயது க்ஷ மாணவன், சக மாணவர்களுடன் சேர்ந்து அமைச்சர் சிவசங்கரிடம், குன்னத்தில் இருந்து எழுமூர் வழியாக தொழுதூர் செல்லும் அரசு பஸ், பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்கிறது. எங்களை ரொம்ப அசிங்க அசிங்கமாக பேசுறாங்க என புகார் அளித்தார். உடனே அமைச்சர், டிரைவர், கண்டக்டர் மீது ஆக்சன் எடுத்து விடுவோம் என்று கூறினார். பின்னர் அதிகாரிகளிடம், கண்டக்டர், டிரைவர் யார் என்று விசாரித்து உடனடியாக ரிப்போர்ட் கொடுக்கும்படி கூறினார். இதையடுத்து அரியலூர் பணிமனை மேலாளர் குணசேகரன் விசாரித்ததில், அந்த பஸ் டெப்போ டிரைவர் சின்னத்துரை (40) திட்டியது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.
The post பஸ் ஸ்டாப்பில் நிறுத்தாமல் சென்றதால் அமைச்சரிடம் மாணவன் புகார் டிரைவர் அதிரடி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.