இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை பாகிஸ்தானுக்கான சீன தூதர் ஜியாங் ஜைடோங் சந்தித்தார். இதைத் தொடர்ந்து ஜியாங் பாகிஸ்தான் அரசு நடத்தும் ரேடியோ பாகிஸ்தானுக்கு அளித்த பேட்டியில், ‘‘பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து அதிபர் சர்தாரி கவலை தெரிவித்தார். இதுபோன்ற நடவடிக்கைகள் பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துவதாகக் கூறினார்.
தெற்காசியாவில் அமைதி, ஸ்திரத்தின்மையை பாதுகாக்க, சீனா, பாகிஸ்தானின் பொதுவான விருப்பத்தை அடைய, சீனா எப்போதும் பாகிஸ்தானை ஆதரிக்கும்’’ என்றார். சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நட்பை சீன தூதர் மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும் இருதரப்பு உறவை, சவாலான காலங்களில் எப்போதும் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் இரும்புக்கரம் கொண்ட சகோதர உறவாக அவர் விவரித்ததாகவும் ரேடியோ பாகிஸ்தான் செய்தி வெளியிட்டுள்ளது.
The post பாகிஸ்தானுக்கு எப்போதும் சீனாவின் ஆதரவு உண்டு: தூதர் ஜியாங் தகவல் appeared first on Dinakaran.