டாக்கா: பாகிஸ்தான் உடனான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது வங்கதேசம். வேகப்பந்து வீச்சாளர்கள் டஸ்கின் அகமது மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் அபாரமாக பந்து வீசி வங்கதேச அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று டாக்காவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச முடிவு செய்தது.